
புவனேஷ்வர், ஜன 8-
இந்தியா ஓடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் பராவாசி எனப்படும் உலகம் புலம் பெயர்ந்த இந்தியா வம்சாவளி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் மலேசிய அரசாங்கத்தின் சார்பில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொண்டுள்ளார்.
சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பிரகாஷ் அவர்களும் அமைச்சர் கோபிந்த் சிங்குடன் உடன் சென்றுள்ளார்.
இந்தியா – மலேசியா இடையிலான உறவுகள் எதிர்காலத்தில் மிகவும் வலுவாக இருக்கும் என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் பல்துறை கூட்டமைப்புகளில் விரிவான வளர்ச்சியின் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

கணினி தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, இலக்கவியல் சேவைகள் ஆகிய துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான பெரிய அளவிலான வாய்ப்புகள் இருப்பதாக அவர் சொன்னார்.
இந்தியா இலக்கவியல் துறையில் மிக வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதன் அனுபவம், முன்னேற்றம் மலேசியாவுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றது என்று கோபிந்த் சிங் டியோ பாராட்டினார்.
இரு தரப்பிலும் பல்வேறு தொழில்நுட்பமான, வணிகக் கூட்டணிகள் உருவாகி வருவதால், இந்த ஒத்துழைப்புகள் விரைவில் நல்ல பலனை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

