பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் கோவிலில் ஜன 10 இல் மார்கழி திருவெம்பாவை!

கோலாலம்பூர், ஜன.9-
பிரிக்பீல்ட்ஸ் கற்பக விநாயகர் ஆலய நிர்வாகத்தின் ஆதரவோடு மலேசிய இந்து சங்கம், மலேசிய இந்து தர்ம மாமன்றம், பன்னிரு திருமுறை வளர்ச்சி மையத்துடன் இணைந்து அர்த்தஞான மையத்தின் ஒருங்கிணைப்பில் சமய ஒன்றுகூடல் நிகழ்வு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தலைநகர் கற்பக விநாயகர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாளை 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இலங்கை சைவ பெரியார் சிவத்தமிழ் செல்வர் சித்தாந்த செம்மணி சைவ புலவர் செல்லையா நவநீதகுமார் எம்.ஏ அவர்கள் மார்கழி திருவெம்பாவை தொடர்பில் நண்பகல் 12.00 முதல் 1.30 மணி வரை சமய சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பிள்ளைகள், குடும்பத்தினருடன் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 012-3025643, 0122717776 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles