
சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகராக இருந்த போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 1 கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றார் என்று கூறப்படுவது சுத்த பொய் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு செயலாளர் புவான் ஜூவாரியா தெரிவித்தார்.
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இவர் சொல்வது சுத்த பொய். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆண்டுக்கு 1 வெள்ளி மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டார் தவிர 1 கோடியே 50 லட்சம் வெள்ளியை அவர் வாங்கவில்லை என்று ஜூவாரியா பதிலடி கொடுத்துள்ளார்.

