
கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகள் இன்று காலையில் மீண்டும் தடைபட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.
எல்ஆர்டி சேவைகள் தடைபட்டதால் அங்கு வரிசை பிடித்து நிற்கும் பயணிகள் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ளது.
மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த தடங்கள் ஏற்பட்டதாக ராப்பிட் கே.எல். தெரிவித்துள்ளது.
காலை 7.35 மணிக்கு தடைபட்ட எல்ஆர்டி சேவைகள் பின்னர் 7.56 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பியது.

