
கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஐந்து முறை உலகச் சாம்பியன் பிரேசில் மற்றும் குரோசியா அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
முதல நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் பிரேசில் – தென் கொரியா அணிகள் மோதின.
ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.
வினி ஜூனியர் 7ஆவது நிமிடத்திலும், நெய்மர் 13ஆவது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29ஆவது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 7ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் குரோசியா 3-1 என்ற பெனால்டி கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
முதல் 90 நிமிட ஆட்டம் டிராவில் முடிந்தது. கூடுதல் நேரத்திலும் இரு குழுக்களும் கோல்களை அடிக்கவில்லை.
வெற்றியாளரை முடிவு செய்ய ஐந்து பெனால்டிகள் வழங்கப்பட்டன.
இதில் குரோசியா 3-1 என்ற பெனால்டி கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது

