நாடு முழுவதும் கார்த்திகை தீபம் விமரிசையாக கொண்டாடப்பட்டது

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் நமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு தீபத்திருநாள் ஆகும்.

அந்த வகையில் நேற்று மலேசியாவில் உள்ள இந்து கோவில்களில் இல்லங்களிலும் கார்த்திகை தீபம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா – புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா தலைமையில் கார்த்திகை தீபம் விமரிசையாக நடைபெற்றது.

கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவக்குமார் பட்டர், சிவஸ்ரீ சிவானந்தா பட்டர், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குருக்கள் சிவஸ்ரீ சிவராஜ் பட்டர் ஆகியோர் கார்த்திகை தீப பூஜைகளை சிறப்பாக நடத்தினர்.

இதனிடையே
கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ செந்தூல் ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபம் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

சிறப்பு பூசைகளுடன் கோவில் வளாகம் முழுவதும் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles