சென்னையில் அனைத்துலக  தமிழர்கள் எழுமின் பொருளாதார மாநாடு! 40 நாடுகளிலிருந்து 850 பேராளர்கள் பங்கேற்பு!

காளிதாஸ் சுப்ரமணியம்

சென்னை, ஜன 10-
தமிழ் நாடு தலைநகர் சென்னையில்
“தமிழா, வணிகம் வெல் – வையத் தலைமை கொள்” என்று முழக்கத்துடன் அனைத்துலக தமிழர்கள் எழுமின் பொருளாதார மாநாடு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

The Rise Global – எழுமின் 14 ஆவது உலக மாநாடு அதிகாரப்பூர்வமாக 8 ஜனவரி தொடங்கி 11 ஜனவரி வரையிலும் நடைபெருகிறது.

இந்த மாநாட்டினை தமிழ் நாடு வர்த்தக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

அமைச்சர் அன்பரசன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகின் வல்லமை மிக்க தலைவர்களும் நிறுவனங்களும் கூடும் இந்த மாநாட்டில் 1000க்கும் மேற்பட்ட தமிழ்த் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உலக தமிழர்கள் மத்தியில் வணிக்கத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் இந்த மாநாடு அமைந்திருக்கிறது என்று டிரா மலேசிய தலைவர் டத்தோ சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.

மலேசிய திருநாட்டில் இருந்து சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் டான்ஸ்ரீ பாலன், சென்செவ் நிறுவனத்தின் துணை தலைவர் தமிழ் செல்வன்
பினாங்கு மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, பினாங்கு மாநில பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், பகான் டாலாம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் குமரன் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles