தஞ்சோங் துவாலாங் சீக்கியர் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பிரச்சினை சமாளிப்பது குறித்து முக்கிய பேச்சு வார்த்தை!

தஞ்சோங் துவாலாங், ஜன 10-

பேராக் தஞ்சோங் துவாலாங் சீக்கியர் குறிப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தஞ்சோங் துவாலாங் பெங்குலு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பத்து காஜா மாவட்ட அதிகாரி Zul Hisham உட்பட கம்பார் மற்றும் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சுங்கை ஆயர் ஈத்தாம் பகுதியில் உள்ள பம்ப் ஹவுஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இங்குள்ள ஆற்றுப் பகுதியை மேம்படுத்தி வெள்ளமா ஏறாமல் இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் சுங்கை கிந்தா மற்றும் சுங்கை ஆயர் ஈத்தாமில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் இங்குள்ள மக்கள் பலமுறை பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த குடியிருப்பில் உள்ள 19 சீக்கிய குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிக விரைவில் சீக்கிய குடியிருப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இவர்களுக்கு தேசிய பேரிடர் மூலமாக உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பத்து காஜா மாவட்ட அதிகாரி Zul Hisham மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles