



கோலாலம்பூர் ஜன 12-
விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ ராஜா சைமன் கிண்ண புட்சால் போட்டியை பண்டார் துன் ரசாக் புத்ரா பிரிவு வெற்றிகரமாக நடத்தியது.
பண்டார் துன் ரசாக் ம இகா தொகுதி துணை தலைவர் மற்றும் மஇகா தேசிய இளைஞர் விளையாட்டு துறை தலைவர் ஆண்ட்ரூ டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் 23 குழுக்கள் கலந்து கொண்டன.
விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ ராஜா சைமன் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
பண்டார் துன் ரசாக் ம இகா தொகுதி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு டத்தோ ராஜா சைமன் முழு ஆதரவு வழங்கி வருகிறார் என்று ஆண்ட்ரூ டேவிட் தமது உரையில் குறிப்பிட்டார்.
போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த குழுக்களும் பரிசுகளும் ரொக்க மும் வழங்கப்பட்டது.
சகோதரர் சுஹன் ராஜ் (MIC மத்திய செயற்குழு உறுப்பினர்), சகோதரர் அரவிந்த் தனபாலன் (BTR MIC இளைஞர் தலைவர் மற்றும் தேசிய MIC விளையாட்டு பணியகத்தின் செயலாளர்), சகோதரர் சஷி குமார் (தேசிய மஇகா படைப்படையின் உச்சமன்ற உறுப்பினர்), சகோதரர் கேசவ் குமார் (விலாயா மாநில புத்ரா துணை தலைவர் திருமதி கோகிலம் (MIC BTR மகளிர் துணைத் தலைவி) மற்றும் MIC BTR தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

