சுங்கை பூலோவில் தைப்பொங்கல் கலைக்கட்டியது! 4,000 பேருக்கு பொங்கல் பொருட்களை வழங்கினார் டத்தோஸ்ரீ இரமணன்!

சுங்கை பூலோ, ஜன 12-
வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகில் வாழும் தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாட காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதாவது தை மாதத்தின் வருகை புதிய வாய்ப்புகளை பெரும் உற்சாகத்தையும் தருகிறது.

அந்த வகையில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். இரமணன் இன்று 4,000 பேருக்கு பொங்கல் பொருட்களையும் கறும்பையும் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் தொகுதி மக்களுடன் இணைந்து சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறார்.

இவ்வாண்டு தைப்பொங்கல் கொண்டாட்டம் சுங்கை பூலோ மக்களுக்கு பெரும் ஆனந்தமாய் அமைய டத்தோஸ்ரீ இரமணன் நேரடியாக களத்தில் இறங்கி பொங்கல் பொருட்களையும் கறும்பையும் வழங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

Persatuan Kebajikan Rakyat Sungai Buloh, pemimpin penduduk Pangsapuri Gugusan Kantan, Kekwa, Kemboja , Tanjung dan Cempaka இணைந்து சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மையம் இன்று மிகப்பெரிய அளவில் விழாவை நடத்தி மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கியது.

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் சுரேஸ் உட்பட சமூக தலைவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles