
கெடா மாநிலத்தில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் அமோக வெற்றி பெற்றுள்ளது.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட அஸ்மான் நஷாருடின் 51,637 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிட்ட டாக்டர் சோபி 35,377 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
பக்கத்தான் ஹரப்பானுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொண்ட தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சிவராஜுக்கு 2,983 வாக்குகள் கிடைத்துள்ளன.
பக்கத்தான் ஹரப்பான் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட பாடாங் செராய் இப்போது பெரிக்கத்தான் நேஷனல் கோட்டையாக மாறிவிட்டது.

