60,000 கோடி வெள்ளி தவறாக பயன்படுத்தியது விவகாரம்!
விசாரணை சூடு பிடிக்கிறது

மக்களின் பணம் என்று வர்ணிக்கப்படும் 60,000 கோடி வெள்ளி தவறாக பயன்படுத்தியது தொடர்பில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், முன்னாள் நிதியமைச்சர் தெங்கு ஷப்ரூல் மற்றும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோர் விசாரணை வரும்படி எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் விசாரணை சூடு பிடித்ததுள்ளது.

நாட்டை உலுக்கிய இந்த மிகப்பெரிய தொகை விவகாரம் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இது முழுக்க முழுக்க மக்கள் பணம். குறிப்பாக இபிஎப் பணமாகும் என்று அன்வார் இப்ராஹிம் சுட்டி காட்டினார்.

இது தொடர்பாக எம்ஏசிசி இப்போது விசாரணை கோப்புகளை திறந்துள்ள வேளையில் மூன்று முக்கிய அரசியல்வாதிகள் விசாரணைக்கு வரும்படி எம்ஏசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனிவரும் நாட்களில் இது தொடர்பில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles