
பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பெரிக்கத்தான் நேஷனல் அமோக வெற்றி பெற்றுள்ளது.
வட மாநிலம் உட்பட பல இடங்களில் பெரிக்கத்தானின் நீல அலை வீசுவதால் பக்கத்தான் ஹரப்பான் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கம் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடுமையாக உழைக்க வேண்டும்.
பாடாங் செராயில் பெரிக்கத்தானின் அமோக வெற்றியானது பக்கத்தான் ஹரப்பானுக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய மிரட்டலாகும்.
கடந்த தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் லூனாஸ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அஸ்மான் நஷாருடின் பின்னர் அணி தாவினார்.
இம்முறை பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பாடாங் செராயில் போட்டியிட்டு 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

