பிரயோஜனமில்லாத மெகா திட்டங்களை பிரதமர் உடனடியாக நிறுத்த வேண்டும்!

மலேசியாவின் 10ஆவது பிரதமராக பதவி ஏற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு பினாங்கைச் சேர்ந்த சமூக அமைப்புக்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என அந்த அமைப்புக்களின் சார்பாக பேசிய பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

பிரதமர் அவர்கள், பொது மக்களுக்கு பயன்படாத மெகா திட்டங்களுக்கு முழு தடை விதிக்க வேண்டும் .

இதுவரை, பிரதமர் தனது புதிய நிர்வாகத்திற்கான மக்களுக்கு பயன்படும், பணத்தை மிச்ச படுத்தும் வழிகளை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது.

குறிப்பாக ஆடம்பரமான செலவினங்களைத் தவிர்த்து, குறிப்பாக தனது அதிகாரப்பூர்வ காரைத் தேர்ந்தெடுப்பதில், அரசாங்கத்திற்கு பெரும் தொகையை மிச்சப்படுத்தியுள்ளார்.

புதிய நிர்வாகத்தின் நிதிய மதிநுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைச்சர்களின் ஊதியத்தை குறைக்கவும் அமைச்சரவையை சிறியதாக குறைக்கவும் அவர் விரும்புகிறார்.

அதே பாணியில், 
பில்லியன் கணக்கான ரிங்கிட் பொது நிதியை உள்ளடக்கிய அனைத்து மெகா திட்டங்களையும் புதிய பிரதமர் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என பினாங்கின் பொது அமைப்புக்கள் விரும்புவத்காக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles