1 கோடியே 50 லட்சம் வெள்ளியை பெற்றேனா! மன்னிப்பு கேளுங்கள் மொகிதீனுக்கு அன்வார் உத்தரவு

சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகராக இருந்த போது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 1 கோடியே 50 லட்சம் வெள்ளி பெற்றார் என்று கூறப்படுவது முன்னாள் பிரதமர் மொகிதீன் யாசின் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு
சுத்த பொய் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு செயலாளர் புவான் ஜூவாரியா மறுத்துள்ளார்.

தம் மீது அபண்டமாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி இருக்கும் பெரிக்கத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எனக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவேற்றம் செய்த டிக் டாக்கையும் அவர் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மூன்று நாள் அவருக்கு அவகாசம் தருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles