மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதல் பரிசு!

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்தி முதல் பரிசு பெற்றார். குன்னத்தூர் அரவிந்த் 15 காளைகளை அடக்கி 2-வது பரிசு பெற்றார். திருப்புவனத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3-வது பரிசு பெற்றார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மலையாண்டி சிறந்த காளையாக முதல் பரிசு பெற்றது.

இரண்டாவது பரிசு காளை GR கார்த்தி பைக் பரிசு பெற்றார். முதல் பரிசாக மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் சார்பில் காரும், 2, 3-ம் பரிசாக பைக் மற்றும் கன்றுடன் கூடி பசு வழங்கப்பட்டது. சிறந்த காளைக் கான முதல் பரிசாக முதல்வர் மு.க ஸ்டாலின் சார்பில் டிராக்டர், மேயர் சார்பில் கன்றுடன் கூடிய பசுமாடு வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles