
திருவனந்தபுரம்: ஜன 15-
சரண கோஷம் விண்ணை பிளக்க சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரிந்தது.
மகரஜோதியை முன்னிட்டு சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சபரிமலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய மண்டல, மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஐயப்ப பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காத்திருக்கும் மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நேற்று நடைபெற்றது.
மகரஜோதியை தரிசிப்பதற்காக பக்தர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே பாண்டித்தாவளம் அப்பாச்சி மேடு, சரங்குத்தி, புல்மேடு உள்பட பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி தங்கியுள்ளனர்.
சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் அங்கு குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

