
தமது தலைமையிலான அமைச்சரவையில் துணை அமைச்சர் நியமனம் தொடர்பாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலையில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷாவை சந்திக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாமன்னர் அங்கீகாரம் கிடைத்த பின்னர் துணை அமைச்சர்கள் பெயர் பட்டியலை இன்றிரவு 8.15 மணிக்கு அறிவிக்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

