
ஏழை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மித்ரா நிதி மோசடி தொடர்பில் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிறுபான்மை வணிகர்கள் மன்றத்தின் தலைவர் கோபி கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார்.
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஒரு முன்னாள் துணை அமைச்சரும் இந்த மித்ரா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
விரைந்து விசாரணை நடத்தக் கோரி உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மகஜரை கொடுப்போம் என்று அவர் சொன்னார்.

