
சென்னை ஜன 21-
நடிகர் விஜய் மக்களை சந்தித்தது அரசியலா அல்லது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையா, கட்சி தொடங்கி ஓராண்டாக பரந்தூருக்கு விஜய் ஏன் செல்லவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னைக்கு அருகில் விமான நிலையம் வேண்டாம் என்கிறாரா விஜய், விமான நிலையம் வேண்டும் என்றால், எந்த இடத்தை தேர்வு செய்து அவர் கொடுப்பார்.
ஏனென்றால், பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும்.
டங்ஸ்டன் பிரச்சினை வேறு, விமான நிலைய பிரச்சினை வேறு. எனவே, பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக கையாண்டு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வருவார்கள்.
எரிகிற நெருப்பில் விஜய் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா?
நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒராண்டாகிறது. இந்த ஓராண்டாக பரந்தூர் பக்கம் விஜய் ஏன் செல்லவில்லை. இவ்வளவு நாட்கள் என்ன செய்தார்.
விஜய் மக்களை சந்தித்தது அரசியலா அல்லது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

