

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று நடந்த முதல் கால் இறுதி ஆட்டத்தில் குரோசியா 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
120 நிமிட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்ததை தொடர்ந்து வெற்றியாளரை முடிவு செய்ய ஐந்து பெனால்டிகள் வழங்கப்பட்டன.
இதில் குரோசியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற வேளையில் பிரேசில் கண்ணீரோடு வெளியேறியது.
பின்னர் நடைபெற்ற 2 ஆவது கால் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துடன் டிரா கண்டது.
பின்னர் 4-3 என்ற பெனால்டி கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

