

புதிய அமைச்சரவையில் சட்டத் துறை துணை அமைச்சராக புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் பிரபல வழக்கறிஞராக விளங்கிய கர்ப்பால் சிங்கின் புதல்வரான இவரும் மிகவும் துணிச்சலுடன் போராடும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் சரி, நீதிமன்றத்திலும் சரி இவரின் கம்பீரமான குரல் அனைவரையும் கவர்ந்து விடும்.
தந்தை கர்ப்பால் சிங்கை போல் துணிந்து குரல் எழுப்பி வரும் ராம் கர்ப்பால் சிங் பல வழக்குகளில் இலவசமாக வாதாடி வெற்றி பெற்றவர்.
குறிப்பாக இரண்டு ஜசெக உறுப்பினர்களான குணசேகரன், சாமிநாதன் உட்பட 12 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சொஸ்மாவில் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்காக இலவசமாக வாதாடியவர் ராம் கர்ப்பால் சிங் ஆவார்.
சட்டத் துறை துணை அமைச்சராக நியமிக்கப் பட்டிருக்கும் இவர் நீதியை நிலைநாட்ட போராடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை

