துணை அமைச்சராக நியமிக்கப் பட்டிருக்கும் சரஸ்வதி கந்தசாமி ஒரு சமூக போராட்டவாதி

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை துணை அமைச்சராக பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய சமுதாயத்திற்காக பல போராட்டங்களில் இவர் பங்கேற்று போராடி இருக்கிறார்.

குறிப்பாக மைக்கா ஹோல்டிங்ஸ் ஊழல் , மித்ரா ஊழல்கள் குறித்து மிகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இந்திய சமுதாயம் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை தொட்டும் இவர் பேசி வருகிறார்.

கெஅடிலான் தேசிய உதவித் தலைவராக பொறுப்பேற்ற இவர் நடந்து முடிந்த தேர்தலில் தாப்பாவில் போட்டியிட்டு கடும் போட்டியை வழங்கினார்.

துணிச்சலுடன் போராடும் குணம் படைத்த இவர் கண்டிப்பாக இந்திய சமுதாயத்திற்கு பல நன்மைகளை கொண்டு வருவார் என்று சமுதாயம் பெரிதும் எதிர்பார்க்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles