கெஅடிலான் இந்திய எம்.பி.களுக்கு மீண்டும் பெருத்த ஏமாற்றம்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் முழு அமைச்சர் மற்றும் துணை அமைச்சராக எந்தவொரு கெஅடிலான் இந்தியர் எம்பிக்கள் நியமிக்கப்படாமல் போனது பெருத்த ஏமாற்றமாகும்.

ஜசெக சார்பில் ஆறு இந்தியர்கள் வெற்றி பெற்ற வேளையில் அந்த கட்சி சார்பில் மனித வள அமைச்சராக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் நியமிக்கப்பட்டார்.

ஆனால் கெஆடிலான் சார்பில் வெற்றி பெற்ற நான்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட முழு அமைச்சராக நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று துணை அமைச்சர்களாக ஜசெக சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் மற்றும் கெஅடிலான் சார்பில் சரஸ்வதி கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற கெஅடிலான் எம்பிக்களான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் கேசவன், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ் வரன் ஆகியோரில் ஒருவர் கூட துணை அமைச்சராக நியமிக்கப்படாமல் போனது பெருத்த ஏமாற்றமாகும்.

கெஅடிலான் எனப்படும் நீதிக் கட்சியில் இன்னொரு இந்தியர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நீதி நிலைநாட்டப் பட்டிருக்கும்.

ஆனால் நீதிக் கட்சியில் நீதி இல்லை என்று அதன் உறுப்பினர்கள் மனம் குமுறுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles