எனக்கு எதிராக அவதூறுகள் பரப்பினால் சட்ட நடவடிக்கை பாயும்! டாக்டர் இராமசாமி எச்சரிக்கை

என்னைப் பற்றியும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தை பற்றியும் அவதூறுகள் பரப்பும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி எச்சரித்தார்.

நானும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ இமாச்சந்திரனும் அறப்பணி வாரியத்தின் பணத்தை மோசடி செய்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

இவர்கள் யார் என்று கண்டுபிடித்து சட்ட நடவடிக்கையை எடுப்போம்.

ஏற்கனவே ஒருசிலர் இதுபோன்ற அவதூறுகளை பரப்பியபோது அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வெற்றி பெற்றோம்.

நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம் என்று பகிரங்கமாக மன்னிப்பும் கோரினர்.

இப்போது இதே பாணியில் அவதூறுகளை பரப்ப புதிய கும்பல் புறப்பட்டுள்ளது. அவர்களை மிக விரைவில் நீதிமன்றத்தில் சந்திப்போம்.

பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியம் கோடி வெள்ளி சொத்துக்களுடன் சீரும் சிறப்புடன் விளங்கி வருகிறது.

உயர்கல்வி பயிலும் ஏழை இந்திய மாணவர்களுக்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இலவச கல்வி நிதியை வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles