அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதில் தொடர்ந்து பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருகிறோம்!

கோலாலம்பூர் ஜன 23-
அந்நியத் தொழிலாளர்களுக்கு லெவி கட்டண உயர்வு, சம்பள உயர்வு, ஈபிஎஃப், தரமான தங்குமிடம் என உணவக உரிமையாளர்கள் பல்வேறு சுமைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

அரசு விதிக்கும் அனைத்து சட்டங்களையும் பின்பற்றி தவறாமல் அமல்படுத்தி வருகின்றோம்

இருந்தபோதிலும் அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகிறோம் என்று பிரெஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவகங்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஹவலர் அலி தெரிவித்தார்.

இதுபோன்ற சிக்கல்கள் உணவகத்துறைக்கு தான் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.

கடந்த கோவிட் 19 காலத்தில் நிறைய உணவகங்கள் மூடப்பட்டது. அதே போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் கோவிந்தசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles