
கோலாலம்பூர் ஜன 23-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை ஏற்பாட்டில் பரதன் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நாளை செலாயாங் அரங்கில் இரவு 8.00 மணிக்கு நடைபெறுகிறது.
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பரதன் கிண்ணத்தை தட்டிச் செல்ல திரெங்கானு குழுவுடன் நெகிரி செம்பிலான் குழு மோதுகிறது.
பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் திரெங்கானு கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்

