
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜன 30-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழா நேற்று dewan komunity koparasi polis 2 Batu muda மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அங்கமாக 15 மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பு செய்யப்பட்டனர்.
விழாவுக்கு சிறப்பு வருகை தந்த ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் முன்னிலையில் இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில்
மலேசிய நண்பன் செய்தி ஆசிரியர் செ.வே.மலைச்செல்வன், மக்கள் ஓசை
அல்லி முத்து, செல்லத்துரை மலேசிய நண்பன்,
ஆர். ராஜா சிலாங்கூர் கினி செய்தி ஆசிரியர்,
சுகுமாறன் ஆறுமுகம் – மக்கள் ஓசை, சுமதி கிருஷ்ணன்- மக்கள் ஓசை, சாந்தா ஐயப்பன் – மக்கள் ஓசை, மாரியப்பன் முத்துசாமி – தமிழ் நேசன், கிருஷ்ணன் பெருமாள் – தமிழ்நேசன், சரோஜா சாமிநாதன் – தமிழ் நேசன்,
சுசிலா மனியம் – தமிழ் நேசன்,
சுந்தர் மருதமுத்து – தமிழ் நேசன்,
திருமதி உஷா
முன்னாள் தினமணி பணியாளர்,
டத்தின் கோகிலவாணி – நாளை நமதே ஆசிரியர் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

