
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜன 30-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம இகா தேசிய துணை தலைவருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் 5,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் 6 ஆம் ஆண்டு குடும்ப தின விழா நேற்று dewan komunity koparasi polis batu muda மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
குடும்ப தின விழாவுக்கு சிறப்பு வருகை புரிந்த டத்தோஸ்ரீ எம். சரவணன் குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
தேசிய கீதம் மற்றும் தமிழ் வாழ்த்துக்கு பின்னர் இன்னிசை விழா நடனங்களுடன் இனிதே குடும்ப விழா உற்சாகத்துடன் களைக்கட்டியது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா, இளைஞர் அணி தலைவர் அர்விந்த், ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட், டத்தோ ஆர்.இராமநாதன், விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சில் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன் , ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குனர் சுரேந்திரன் மற்றும் 100 பிளாஸ் குளிர்பான நிறுவனத்தின் விற்பனை பிரிவு அதிகாரி முகமட் பாவ்சி ஆகியோருக்கு டத்தோஸ்ரீ சரவணன் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தார்.

மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் டத்தோஸ்ரீ சரவணன் தமது சார்பில் 5,000 வெள்ளியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் குடும்பத் தின விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஜீவா ராஜா உட்பட அனைத்து செயலவை உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ சரவணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் குடும்ப தின விழாவில் கலந்து கொண்ட 350 பேருக்கு சுவையான உணவை வழங்கினார்.
இதற்கான மொத்த செலவையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

