வரலாறு படைத்த மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஜன 30-
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது

சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ் மன்னன் தலைமையில் தலைநகர் dewan komunity koparasi polis 2 Batu muda சமூக மண்டபத்தில் இவ்விழா நடைபெற்றது.

நாட்டிலுள்ள முதன்மை தமிழ் நாளிதழ்களின் பணியாளர்களை கொண்டு தொடங்கப்பட்ட இச்சங்கத்தில் தற்போது 170க்கும் அதிகமான உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

நேற்று காலை நடைபெற்ற இவ்விழாவிற்கு மஇகாவின் தேசிய துணை தலைவரும் தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சிறப்பு வருகை புரிந்தார்.

தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் செயலாளர் வெற்றி விக்டர் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

விழாவில் சிறப்புரை நிகழ்த்திய டத்தோஸ்ரீ சரவணன், சங்கத்தின் வளர்ச்சிக்காக 5 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.

சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்காக நடத்தப்பட்ட இவ்விழாவில் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் வருகை புரிந்து உணவுக்கான மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டார்.

மஇகா தேசிய உதவி தலைவர் டத்தோ டி.முருகையா, இளைஞர் பிரிவு தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் ஆண்ட்ரூ டேவிட் புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் , கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ, விலாயா மாநில பிபிபி கட்சியின் தலைவர் சத்யா சுதாகரன், ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குனர் சுரேந்திரன், டத்தோ இராமநாதன், மலேசிய இந்தியர் கட்சியின் தலைவர் புனிதன், விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார், கம்போங் பண்டான் ராஜா, ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், மாலை முனி , கெப்போங் கெஅடிலான் தொகுதி தலைவர் ஜெயக்குமார், டத்தோஸ்ரீ ஹரி, செலாயாங் பசார் போரோங் காய்கறிகள் விற்பனை சங்கத்தின் தலைவர் டாக்டர் மணிச்செல்வன், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் செல்வராஜ், டத்தோ டாக்டர் குணாஜி, மலேசிய கராத்தே மாஸ்டர் பொன்னையா, டத்தோ இராமநாதன், உலு சிலாங்கூர் கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து, அமைச்சர் பாமி பட்சில் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள், சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles