

கோலாலம்பூர் ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலையில் ஆகம முறைப்படி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கோலாலம்பூர் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவராஜ் பட்டர் , தமிழகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குருக்கள் சிவராஜ் பட்டர் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் விலாயா மாநில ம இகா தலைவர் டத்தோ சைமன் ராஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் விளங்கிக் கொண்டிருக்கிறது.
இன்று காலையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

