இராமச்சந்திரன் மீதான ஆறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்! டாக்டர் இராமசாமி அறிவிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்ட பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ எம். இராமச்சந்திரன் கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா என்பது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படும்.

விசாரணைக்காக பொறுமையாக காத்திருப்பதற்கு பதில் அவர் கூறும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமானவை என்று பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் மீது இவர் நடத்தும் தாக்குதல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

அவர் மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு அவர் முறையாக பதில் அளிக்க வேண்டும் என டாக்டர் இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles