

கட்டார் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து இங்கிலாந்து, போர்ச்சுக்கல் குழுக்கள் வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றிரவு நடைபெற்ற 3 ஆவது கால் இறுதி ஆட்டத்தில் மொரோக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற 4 ஆவது கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
17வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ட்சோயமெனி ஒரு கோல் அடித்தார்.
54வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமப்படுத்தினார்.
பின்னர் 78 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஒலிவர் கிரவுட் ஒரு கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

