துணை அமைச்சர் பணியைத் தொடங்கினார் சரஸ்வதி கந்தசாமி

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை துணை அமைச்சராக பிரபல வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய சமுதாயத்திற்காக பல போராட்டங்களில் பங்கேற்று இருக்கும் இவரின் பங்களிப்பு அளப்பரியது.

மைக்கா ஹோல்டிங்ஸ் ஊழல் , மித்ரா ஊழல்கள் குறித்து மிகவும் துணிச்சலுடன் குரல் கொடுத்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இந்நிலையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை துணை அமைச்சராக பதவி ஏற்றுள்ள சரஸ்வதி கந்தசாமி இன்று முதல் தனது பணியை அதிகாரப் பூர்வமாக தொடங்கினார்.

இன்று காலையில் அமைச்சுக்கு வருகை புரிந்த அவரை அமைச்சின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சு பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.

நாட்டிற்கும் இந்திய சமுதாயத்திற்கும் இவர் சிறந்த முறையில் சேவையாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles