
பெர்சத்து மற்றும் பெரிக்கத்தான் நேஷனலுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொண்ட சபா ஜிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி பறிபோகாது என்று சபா மாநில முதல்வர் ஹாஜி நோர் தெரிவித்தார்.
பத்து சப்பி, பாப்பார், ரெனாவ், செபித்தாங் ஆகிய நாடாளுமன்ற தொகுதியில் ஜிஆர்எஸ் வெற்றி பெற்றது.
இவர்கள் நான்கு பேரும் ஜிஆர்எஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் தவிர பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அல்ல.
இந்த நான்கு எம்பிக்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் கட்சி தாவல் சட்டத்தை மீறவில்லை என்று அவர் சொன்னார்.
ஆகவே இவர்களின் எம்பிக்கள் பதவி பறிபோகாது என்று அவர் சொன்னார்.

