
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இராமச்சந்திரன் சொல்வது எல்லாம் வடிகட்டின பொய் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பினாங்கு இந்தியர் சங்கம் நிதியுதவியை கேட்டு வந்தபோது அந்த சங்கத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி வழங்கப் பட்டது.
நிதி கேட்டு வந்த பினாங்கு குளுக்கோர் காளியம்மன் கோவில் கட்டட நிதிக்கு ஒரு லட்சம் வெள்ளி வழங்கப்பட்டது.
உடனடியாக மருத்துவ சிகிச்சை நிதி தேவைப்பட்ட மாதுவுக்கு 50,000 வெள்ளி வழங்கப்பட்டது.
இது தவிர்த்து நிதி நெருக்கடியை எதிர்நோக்கிய பல இந்திய குடும்பங்களுக்கு அறப்பணி வாரியத்தின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
எந்த முடிவும் வாரியத்தின் கூட்டத்தில்தான் எடுக்கப்படும். இந்த கூட்டங்களில் டத்தோ இராமச்சந்திரனும் இருந்தார்.
அப்போது எல்லாம் கேள்வியை கேட்காத இந்த இராமச்சந்திரன் இப்போது பினாங்கு இந்து அறப்பணி வாரியம் செய்த உதவிகளை பற்றி கேள்வி எழுப்புவது டன் குற்றச் சாட்டுகளையும் முன் வைத்திருப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது.
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகள் செய்யப் பட்டுள்ளது. இது மாநில இந்தியர்களுக்கு நன்றாக தெரியும்.
எந்த முடிவு எடுத்தாலும் அது வாரியத்தின் கூட்டத்தில் பேசப்பட்ட பிறகே முடிவு செய்யட்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வராக இருக்கும் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.

