
போலீசாரால் தேடப்பட்டு வந்த இரண்டு கொள்ளைகள் நேற்றிரவு கெடா குரூணில் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் வான் ஹசான் வான் அமாட் தெரிவித்தார்.
கார் ஒன்றில் காணப் பட்ட இருவரும் போலீசார் பரிசோதிக்க முயன்ற போது காரை நிறுத்தாமல் தப்பித்து ஓடினர்.
பின்னர் அவர்கள் போலீசாரை நோக்கி சுட்டதால் பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.
இதில் சுட்டுக் கொல்லப் பட்ட ஆடவன் ஒருவன் மீது 60 குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் சொன்னார்.

