
லண்டன், பிப் 3-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் அர்செனல் அதிரடியில் மென்செஸ்டர் சிட்டி படுதோல்வி அடைந்தது.
முதல் பாதியில் அர்செனல் ஒரூ கோலை அடித்தது. பிற்பகுதியில் மேலும் நான்கு கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றது.
மென்செஸ்டர் சிட்டி ஒரு கோலை மட்டுமே அடித்தது. இறுதியில் அர்செனல் 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதுவரை 24 ஆட்டங்கள் முடிவில் அர்செனல் 50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
லிவர்பூல் 56 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

