
கோலாலம்பூர் பிப் 6-
வரும் பிப்ரவரி 10, 11 ஆம் தேதிகளில் பத்துமலை திருத்தலத்தில் தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு தைப்பூசம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.
இன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்த திருத்தலமாக பத்துமலை விளங்குகிறது.
இவ்வாண்டு பத்துமலை திருத்தலத்தில் 18 லட்சம் பேர் கூடுவார்கள் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்துள்ளார்.
ஆகவே
தைப்பூசத் திருநாளை இந்து சமய மக்களாகிய நாம் அனைவரும் சமயநெறி வழுவாமல் அதேவேளை பாரம்பரியத் தன்மை குன்றாமல் சிறப்பான முறையில் கொண்டாடுவோம் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு உகந்த காவடிகளை எடுக்க வேண்டும்.
மேலும் பத்துமலை தைப்பூசத்தில் பக்தர்களுக்கு பல அமைப்புகள் இலவசமாக அன்னதானம் வழங்குகிறது.
அன்னதானத்தை சாப்பிட்டதும் அதன் பொட்டலங்களை குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.
கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடுவதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

