பினாங்கு மாநில பிறை தொகுதி மக்களுக்குஅர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவை செய்வோம்! கிராமத் தலைவர் ஸ்ரீ சங்கர் அறிவிப்பு

பிறை, பிப் 6-
பினாங்கு மாநிலத்தில் உள்ள பிறை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு
அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவையாற்றுவோம் என்று கிராமத் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் உச்சாகத்துடன் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்.

பிறை சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் 4 துணை குழுக்களையும் அமைத்திருக்கிறோம்.

குறிப்பாக சுகாதார பாதுகாப்பு, பொருளாதாரம் – தொழில் முனைவர் மேம்பாடு, சமய விவகாரம் மற்றும் இளையோர் விளையாட்டு ஆகிய நான்கு பிரிவுகளை அமைத்து சேவை ஆற்றி வருகிறோம் என்றார் அவர்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் பிறை சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ அவர்களுடன் எழுச்சியூட்டும் அமர்வை ஏற்பாடு செய்தோம் என்று அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய டத்தோஸ்ரீ ராஜு அரசியலில் தனது பயணத்தையும் சமூகத்திற்கான தனது பார்வையையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

எங்கள் முயற்சிகளை மேம்படுத்த 4 புதிய துணைக் குழுக்களையும் அறிமுகப்படுத்தி இருப்பதை அவர் வெகுவாக பாராட்டினார்.

பிறை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்க கிராமத் தலைவர்கள் தன்னலம் கருதாமல் பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles