இந்நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்களின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்

ஈப்போ, பிப். : இந்நாட்டிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்களின் உணர்வுகளுக்கு தயவு செய்து மதிப்பளியுங்கள். பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் இன ஒற்றுமை மற்றும் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்பு மிகவும் அவசியமாகும். பிரதமரின் ஒற்றுமைத்துறை அமைச்சுடன் கலந்து பேசிய பின் இத்தகைய உணர்வுதிறன் அறிக்கையை வெளியிடும்படி பிரதமரின் சமய விவகாரத்துறை அமைச்சருக்கு அறிவுறுத்தினார் பேராக் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன்.

பேராக் மாநிலத்தில் நான்கு இனத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்து வருகினறனர். இவர்கள் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடன் இருந்து வருகினறனர். இத்தகைய பொறப்பற்ற அறிக்கையில இவர்களின் உணர்வுகள் பாதிப்படையலாம். முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒற்றுமைத்துறை அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும் என்று அவர் கண்டித்தார்.

மலாய்காரர்கள் , சீனர்கள் இந்தியர்கள் மற்றும் பூர்வகுடி மக்கள் பேராக், சிலாங்கூர், பகாங் போன்ற மாநிலங்கில் இருக்கின் றனர். இவர்களின் ஒற்றுமைக்கு எந்த பங்கமும் வராமல் இருக்க செயல்படுவதுதான் அவசியம். ஆகவே, சம்பந்தப்பட்டவர்கள் உணர்வோடு பேச முற்படுவது அவசியமாகும் என்று அவர் கருத்துரைத்தார்.

முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதவர்களின் நிகழ்வுகள் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்துக கொள்ள வேண்டும் என்றால் வேறு தரப்பிடம் அனுமதி கேட்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
அத்துடன், இது நாடாளுமன்றத்தில் அமலாக்கம் செய்யப்பட்ட சட்டம் ஒன்றும் கிடையாது. வெறும் வரையபட்ட திட்டமாகும். ஆகையால், இதனால் இந்நாட்டிலுள்ள மக்களிடையே ஒற்றுமை சீர்குலையாது என்று அவர் உறுதியுடன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles