
பெட்டாலிங் ஜெயா, பிப் 14 – AirlineRatings.com வெளியிட்ட தரவரிசையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த குறைந்த விலை விமான சேவையாக ஏர் ஏசியா உட்பட அதன் இணை நிறுவனமான ஏர் ஏசியா எக்ஸ் – தாய் ஏர் ஏசியா எக்ஸ் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது ஏர் ஏசியா எக்ஸ் குழுவினரின் உழைப்பிற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரமாகும் என்று ஏர் ஏஷியா தலைமை செயல் அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் தெரிவித்தார்.
2023ம் ஆண்டை விட கடந்தாண்டு பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், செயல்பாடுகள் அனைத்தும் முக்கியமான அளவுகோள்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாங்கள் புதுமையான சேவைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும், முக்கியமான விமான நிலையங்களில் பிரீமியம் பயணிகளுக்கு தனித்துவமான லவுஞ்ச் வசதியை அறிமுகம் செய்துள்ளதாவும் பென்யாமின் தெரிவித்தார்.
இந்த வெற்றி விமான நிறுவனத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிப்பதாகவும் கோவிட்-19 பாதிப்பிற்கு பிந்தைய காலத்தில் தங்கள் நிறுவனம் மீண்டும் வலுவாக எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.