காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் துப்புரவு பணி சிறப்பாக நடைபெற்றது!

பெட்டாலிங் ஜெயா, பிப் 16-
நாட்டில் புகழ்பெற்ற காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் துப்புரவு பணி இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது.

2001இல் தொடங்கப்பட்ட காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் முதல் துப்புரவு பணி இதுவாகும்.

கடந்த மாதம் ஜனவரி 19 ஆம் தேதி காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் முதல் தைப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

இன்று காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் முதல் துப்புரவு பணி புக்கிட் காசிங்கில் நடைபெற்றது.

புக்கிட் காசிங் ரேஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் டாக்டர் வேல்குமார் , கிளப்பின் ஆலோசகர் டத்தோஸ்ரீ டாக்டர் சுகுமாறன், கிளப் தோற்றுனர் சக்கரவர்த்தி கோபால் தலைமையில் இந்த துப்புரவு பணி நடைபெற்றது.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் சிறப்பு வருகை தந்து துப்புரவு பணியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

துப்புரவு பணி ஏற்பாட்டுக் குழு தலைவராக திருமதி சந்தானா பொறுப்பேற்றார்.

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

கிளப்பின் பொருளாளர் ராணி, செயலாளர் சந்திரன்,
மகளிர் அணி தலைவி விவியன், இளைஞர் அணி தலைவர் ஓகே. ஆத்மாகான், ராமா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles