2025 ஆம் ஆண்டில்உற்சாகத்துடன் காலடி எடுத்து வைத்தது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் பிப் 16-
நாளை நாடு தழுவிய அளவில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை காலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் வேளையில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உற்சாகத்துடன் 2025 கல்வி ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

சிந்தனைத் திறன், முன்மாதிரியான குணாதிசயம் கொண்ட இந்திய மாணவர்களை உருவாக்க ஶ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி புரட்சி ஆரம்பமாகி உள்ளது என்று அதன் துணை இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.

தொடர்ந்து 43 ஆண்டுகளாக கல்வியை இலக்காகக் கொண்டு இந்திய மாணவர்களுக்கு கல்வி சேவையை ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வெற்றிகரமாக வழங்கி வருகிறது.

இந்த 43 ஆண்டுகளில் 30,000-க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை ஸ்ரீ முருகன் கவிநிலையம் உருவாக்கியுளளது.

நம்முள் புதைந்திருக்கும் இறை சக்தியை உணர்ந்து வெற்றி பெறுவோம் என்ற கருப்பொருளோடு ஸ்ரீ முருகன நிலையம் 2025 ஆண்டில் இயங்கவுள்ளது என்று அவர் சொன்னார்.

4-ஆம் தொழில் புரட்சியின் சவால்களை எதிர்கொள்ள பகுப்பாய்வு, நுண் சிந்தனை திறன், பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஸ்ரீ முருகன் நிலையம் செயல்படவுள்ளது என்றார் அவர்.

இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடக்க விழாவில் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மருத்துவம், பொறியியல், கணக்கியல், தொழில் முனைவோர்,
கல்வி, அரசாங்க சேவை உட்பட பல துறைகளில் சாதனை
புரியும் ஶ்ரீ முருகன் நியலைத்தின் முன்னாள் மாணவர்களுக்கு அர்ஜுனா
விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

ஏழ்மை குடும்பங்களிலிருந்து
கல்வியினால் முன்னேறி இந்த சாதனையாளர்கள் மற்ற மாணவர்களுக்கு
முன்மாதிரியாக விளங்குகின்றனர் என்று அவர் கூறினார்.

முன்னதாக 2025-ஆம் ஆண் டில் ஶ்ரீ முருகன் நிலையம் கெடா, பினாங்கு, பேரா,
சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில்
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பல முக்கிய பகுதிகளில் வாரந்திர
வகுப்புகளை நடந்துகிறது.

மாணவர்களுக்கு கல்வி கருத்தரங்குகள்,
சிந்தனை திறன் பட்டறைகள், தன்முனைப்பு பயிற்சிகள், கையேடுகள்
ஆகிய முக்கிய கல்வி கூறுகள் கொண்ட சிறப்பான வகுப்புகள் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

ஶ்ரீ முருகன் நியலைத்தின் வகுப்புகள் பற்றிை விபரங்களுக்கு ஶ்ரீ முருகன்
நியலைத்துன் முகநூல் அல்லது 011-1122 9464 என்ற எண்களில்
தொடர்பு கொள்ளலாம் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles