மின்சார கட்டணம் உயராது!
டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்..

இதனால் நாட்டிற்கு ஆண்டுக்கு 30 பில்லியன் செலவானாலும் இந்த முடிவு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், , விவசாய நிறுவனங்கள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களையும் உள்ளடக்கியது என்றார்.

மின்சாரக் கட்டணம் உயர்த்தப் பட்டால் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அது பொருந்தும்.

ஏனெனில் அவர்களுக்கு கட்டணம் மிகக் குறைவு, அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு இச்சலுகையை வழங்க முடியாது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles