
சுங்கைப்பட்டாணி, பிப் 18
2025ஆம் ஆண்டு சுங்கைபட்டாணி தைப்பூச விழா பக்தர்களின் ஒத்தழைப்புடன் வெகு விமரிசையாகவும் வெற்றிகரமாகவும் தேவஸ்தானம் நடத்தியது.
உதவிகள் புரிந்த அனைவருக்கும் குறிப்பாக பெரும்பக்கபலாம இருந்து வந்த தொண்டர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அண்ணாசமி பிள்ளை மண்டபத்தில் இன்னிசை நிகழ்வுடன் விருந்து உபசரிப்பினை நிகழ்த்தியது.

அதே வேளையில் கடந்த 3 நாட்களுக்கு தொடர்ந்து தைப்பூச விழாவில் கடும் வெயில் வந்தவர்களுக்கு தாகத்தை போக்க்குவதற்கு தண்ணீர் பந்தல்களை அமைத்தவர்களுக்கும் இந்த விருது நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டு நற்சான்றிதழும் வழங்கப்பட்டன..
கோலமூடா மாவட்ட இந்திய காவல் துறையினர், நன்கொடையாளர்கள்,பிரமுகர்கள் என கலந்துக் கொண்ட இந்த நிகழ்வில் தேவஸ்தானத் தலைவர் பெ.இராஜேந்திரன் தனது உரையில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

விழாவில் தேவஸ்தான பொருளாளார் ந.பத்மநாதன்,அறங்காவலர் வீ.நடராஜன் விழாவில் கலந்துக் கொண்டவர்ககுக்கு சிறப்பு நற்சான்றிதழை எடுத்து வழங்கினார்கள்.

