
சுங்கைப்பட்டாணி, பிப் 18
எதிர்வரும் 26.2.2025 புதன்கிழமையன்று மஹா சிவராத்திரி விழா உலகெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.அந்த வகையில் இந்த வட்டாரத்தில் 56 ஆண்டுகளாக இங்கு சிவன் ஆலயம் பிரமாண்டபமாக அமைக்கப்பட்டு வெகு விமரிசையாக இங்கு சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தனது கனவில் சிவபெருமான் தோன்றி சுங்கை டிவிஷன் அபுபக்கார் பகுதியில் உள்ள பால் மரக் காட்டுப் பகுதியில் அடையாளம் காட்டி தனக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என சிவ பெருமான் கேட்டுக்கொண்டதற்கிணங்க குருமாதா கோகிலா அவர்கள் கடும் முயற்சிக்கு இடையே சிவன் ஆலயத்தை 56 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பினார்.

கைரேகை ஜாதகம்,எண் கணிதம், கட்டம் அமைத்து ஜாதகம்,முத்து போட்டு பார்க்கும் ஜாதகம் என வகையான ஜாதங்கள் பார்க்கும் வழக்க முறையினை கேள்வி பட்டிருப்போம்.
குருமாதா கோகிலா வெற்றிலையில் நடுவில் ஓடும் ரேகைகளை வைத்து ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் பார்த்து சொல்லும் திறமை சிவபெருமான் அவருக்கு அருள் தந்திருந்தார்.

இதனால் நம் நாட்டில் இருந்தும் மட்டுமில்லாமல் சிங்கப்பூர்,இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து சிவராத்தி விழாவிற்கு பலர் வருகைத் தருவது உண்டு.நாடுமுழுவதிலும் உள்ள சீனர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஆலயமாக இந்த சிவன் ஆலயம் விழங்கியதால் அதிகமான சீனர்களும் இங்கு வருவது உண்டு.
இந்த ஶ்ரீ சிவசக்தி ஆலயத்தின் கொள்ளைப்புறத்தில் சமாதி நிலை அடைந்திருக்கும் குருமாதா கோகிலாவிற்குப் பிறகு அவரது மகன் இராதாகிருஷ்ணன் இந்த ஆலயப் பொறுப்பினை கவனித்து வருகிறார்.

சிவன் பெருமான் தனது சக்திதேவியுடனும் விநாயகப் பெருமான்,முருகன் ஆகியோருடன் வீற்றிருக்கும் காட்சி மூலஸ்தானத்தில் இடம்பெற்றிருப்பது கண்கூடாக் காட்சியாக விளங்கி வருகிறது.
27.2.2025 வருடாந்திர விழாவும் இங்கு கொண்டாடப்பட உள்ளது.சிவ பெருமானின் பக்தர்கள் திரளாக கலந்து அவன் அருளாளே அவன் அருளை வேண்டிச் செல்லுமாறு ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

