
உலு சிலாங்கூர் தொகுதியில் உள்ள சுங்கை திங்கி, மேரி, மிஞ்சாங், நைகல் கார்டன் மற்றும் புக்கிட் தாஹார் தோட்டாங்களை சேர்ந்த 84 தோட்டப் பாட்டாளிகள் உடனடியாக வீட்டை காலி செய்யும்படி மேம்பாட்டு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதை பிஎஸ்எம் கட்சி துணை தலைவர் அருட்செவ்வன் கடுமையாக சாடியுள்ளார்.
தோட்டப் பாட்டாளிகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க பிரபல தொழிலதிபர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான் 20 ஏக்கர் நிலத்தை வழங்கி இருக்கிறார்.
இந்நிலையில் வீடுகளை கட்டிக் கொடுக்க கொடுக்காமல் வீட்டை காலி செய்யும்படி தாஹார் மேம்பாட்டு நிறுவனம் வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் நோட்டீஸ் வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.
புதிய மனித வள அமைச்சராக பதவி ஏற்றுள்ள வி. சிவகுமார், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் இதில் தலையிட வேண்டும் என ஐந்து தோட்டப் பாட்டாளிகளுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

