

பத்தாங் காலி – கெந்திங் மலை தொடரில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவு சம்பவம் தொடர்பில் நிலமையை நேரில் கேட்டறிய அமைச்சர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்தில் குழந்தை உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
ஏழு பேர் காயம் அடைந்த நிலையில் 92 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் உட்பட பலரும் இன்று களத்தில் இறங்கினார்கள்.
பத்தாங் காலி முன் சோங் சீனப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தார் என்றும் காயம் அடைந்த சில ஆரியர்கள் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

