சிறந்த முறையில்
இந்திய சமுதாயத்திற்கு மனித வள அமைச்சர்
சிவகுமார் சேவையாற்றுவார்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் சிறந்த முறையில் சமுதாயத்திற்கு சேவை ஆற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக ஆலாம் சினார் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் துணிந்து குரல் எழுப்பிய இவர் இப்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் நாட்டு மக்களுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.

நேற்று பத்து காஜா வில் அலாம் சினார் நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி – டத்தின் ஷிலா மற்றும் ஓம் ஸ்ரீ மகா நாககன்னி அம்மன் ஆலயத்தின் சார்பில் அமைச்சர் சிவகுமாருக்கு சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles